உதவிகள் கேட்டும் கிடைக்கவில்லை... பிரபல நடிகையின் சகோதரர் உயிரிழப்பு - ரசிகர்கள் ஆறுதல்!

cinema
By Nandhini May 05, 2021 08:08 AM GMT
Report

உதவிகள் கேட்டும் கிடைக்காததால், பிரபல நடிகையின் சகோதரர் உயிரிழந்திருப்பது சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில், பொய் சொல்லப் போறோம், ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பாய். இவர், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் அவர், தனது டுவிட்டர் பக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் ஃபருகாபாத்தில் இருப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரருக்கு வெண்டிலேட்டருடன் கூடிய படுக்கை தேவை என்றும், அவர் இறந்துக் கொண்டிருக்கிறார், தயவுச் செய்து உதவுங்கள் என்றும் நெட்டிசன்களிடம் உருக்கமாகக் கேட்டிருந்தார்.

இதனையடுத்து, அவர் எதிர்பார்த்த உதவி எதுவும் கிடைக்காததால், என்னுடைய சகோதரர் உயிரிழந்துவிட்டார் என்று சமூக வலைதளப்பக்கத்தில் நடிகை பியா பாஜ்பாய் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

உதவிகள் கேட்டும் கிடைக்கவில்லை... பிரபல நடிகையின் சகோதரர் உயிரிழப்பு - ரசிகர்கள் ஆறுதல்! | Cinema