திடீரென நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம்

cinema
By Nandhini May 04, 2021 11:17 AM GMT
Report

நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டதால் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ட்விட்டர் விதிமுறைகளை மீறியதால், அவர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான டீசரும் சமீபத்தில் வெளியாகிப் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘குயின்’ படத்தில் நடித்தற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு இன்று திடீரென முடக்கப்பட்டது. அவர் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின்பு நடைபெற்ற வன்முறைகளைப் பற்றி தொடர்ச்சியாக அவர் ட்வீட் செய்து வந்தார்.

மம்தா பானர்ஜியின் வெற்றியை விமர்சிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி வர வேண்டும் என்று அவர் விமர்சனம் செய்ததால் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

திடீரென நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம் | Cinema