கே.வி. ஆனந்த் மரணம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது- ரஜினிகாந்த் உருக்கம்
இயக்குநர் கே. வி. ஆனந்த் மரணம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோ, அயன், மாற்றான் உள்ளிட்ட பிரபல படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். இவர் 1995ம் ஆண்டு தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.
2008ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காகச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்பேர் விருதையும் கே.வி. ஆனந்த் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கே.வி.ஆனந்த் சிகிச்சைப் பலனில்லாமல் இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார்.

இதனையடுத்து, கே.வி.ஆனந்த் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.
— Rajinikanth (@rajinikanth) April 30, 2021