கேத்ரினாவுக்கு கொரோனா தொற்று - தள்ளிப் போகிறதா விஜய் சேதுபதியின் இந்திப் படம்?

cinema
By Nandhini Apr 27, 2021 10:49 AM GMT
Report

இந்தி நடிகை கேத்ரினாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’  இந்தி படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழில் வெளியான ‘மாநகரம்’ படத்தை சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதனையடுத்து, ‘அந்தாதுன்’ இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற இந்தி படத்திலும் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை கேத்ரினா கைஃப் நடிக்க ஒப்பதமாகியுள்ளார். இதன் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்குவதாக இருந்தது.

கேத்ரினாவுக்கு கொரோனா தொற்று - தள்ளிப் போகிறதா விஜய் சேதுபதியின் இந்திப் படம்? | Cinema

இந்நிலையில், நடிகை கேத்ரினாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, படப்பிடிப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி இது பற்றி கூறுகையில், ஏப்ரல் 15ம் தேதி இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்தேன். கேத்ரினாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார்.