கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - பதிலடி கொடுத்த நடிகை விந்தியா

cinema
By Nandhini Apr 27, 2021 09:44 AM GMT
Report

1999ம் ஆண்டு வெளிவந்த சங்கமம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை விந்தியா. இவர் தமிழ், மலையாளம், கன்னடம் , மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை விந்தியா, நடிகை பானுப்பிரியாவின் சகோதரன் கோபிகிருஷ்ணனை 2008ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி திருமணம் செய்தார். ஆனால், சில வருடங்களில் அவரை விவாகரத்து செய்து கொண்டார்.

தற்போது, அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக நடிகை விந்தியா உள்ளார்.  தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுக்காக, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் நடந்து முடிந்தநிலையில், தற்போது அவர் ஓய்வில் உள்ளார். 

இந்நிலையில், நடிகை விந்தியா மாரடைப்பால் இறந்துவிட்டதாக சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து சமூகவலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை விந்தியா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ‘உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா.’என்று பதிவிட்டுள்ளார்.