பிரபல இயக்குநர் தாமிரா கொரோனாவால் உயிரிழந்தார்

cinema
By Nandhini Apr 27, 2021 05:21 AM GMT
Report

பிரபல இயக்குநர் தாமிரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டைச் சுழி’ படத்தை இயக்கியவர் தாமிரா. இந்த படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா என இரு ஜாம்பாவான்கள் நடித்திருந்தனர்.

அதனையடுத்து, சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கினார். தனது அடுத்த படவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், உடல்நிலை மோசமானதால் சிகிச்சைப் பலனின்றி தாமிரா இன்று உயிரிழந்தார்.

தாமிரா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பர் தாமிரா. இரட்டைச்சுழி, ஆண்தேவதை படத்தின் இயக்குனர். கொரோனா பாதிப்பின் காரணமாக பிரிந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா அமைதி கொள்ளவேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்கள் என பதிவிட்டுள்ளார்.