ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுக்கா விட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் - நடிகை ரைசா எச்சரிக்கை!

cinema
By Nandhini Apr 22, 2021 11:57 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் நடிகை ரைசா. அந்த சீசன் முடிந்த பின்னர் நிறைய பட வாய்ப்புகளும் வந்தது. வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதைத் தொடர்ந்து ஹரிஸ் கல்யாண்ணுடன் ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகையாக விருதுகளை வாங்கிக் குவித்தார். தற்போது அவர் காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங்கில் படு பிஸியாக இருந்த ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

அதற்கு காரணம், அழகுப் பதுமையாய் வலம்வந்த ரைசாவின், வலது கன்னம் வீங்கிப் போய் காட்சியளித்தது தான்.

‘நான் தோல் மருத்துவர் பைரவியிடம் ஃபேசியல் ட்ரீட்மென்ட்காக சென்றேன். தான் கேட்காத ஒரு சிகிச்சையை பைரவி எனக்கு செய்தார். அதனால் என் முகம் இப்படி மாறிவிட்டது. நான் அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் எங்கேயோ சென்றுவிட்டார் என்று உதவியாளர்கள் கூறினர்’என்று பதிவிட்டிருந்தார். வீங்கிய முகத்துடன் ரைசா ஒரு போட்டோவையும் வெளியிட்டார்.

ரைசாவின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த தோல் சிகிச்சை மருத்துவர் பைரவி செந்தில், தங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக ரைசா மீது பரஸ்பரம் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுக்கா விட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் - நடிகை ரைசா எச்சரிக்கை! | Cinema

இதுகுறித்து தோல் சிகிச்சை மருத்துவர் பேசுகையில், ரைசாவிற்கு இதே சிகிச்சையை பலமுறை செய்துள்ளேன். அவர், மருத்துவர்களின் அறிவுரையை முறையாக பின்பற்றவில்லை. இதுபோன்று வீக்கம் ஏற்படும் என்றும், இந்த காயம் தானாகவே சரியாகிவிடும் என்பது ரைசாவிற்கு நன்கு தெரியும் என்றார்.

ஆனால், தற்போது, தவறான சிகிச்சையால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோல் மருத்துவர் பைரவி செந்திலுக்கு நடிகை ரைசா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி சிகிச்சை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அவர், 15 நாட்களுக்குள் நஷ்ட ஈடு கொடுக்காவிட்டால், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.