எப்படி இருந்த என் முகம் இப்படி ஆயிடுச்சு : நடிகை ரைசா புகைப்படத்தால் பரபரப்பு!
பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரைசா, அந்த சீசன் முடிந்த பின்னர் நிறைய பட வாய்ப்புகளும் வந்தது.
தற்போது அவர் காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஷூட்டிங்கில் படு பிஸியாக இருந்த ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
‘நான் தோல் மருத்துவர் பைரவியிடம் ஃபேசியல் ட்ரீட்மென்ட்காக சென்றேன். தான் கேட்காத ஒரு சிகிச்சையை பைரவி எனக்கு செய்தார். அதனால் என் முகம் இப்படி மாறிவிட்டது. நான் அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் எங்கேயோ சென்றுவிட்டார் என்று உதவியாளர்கள் கூறினர்’என்று பதிவிட்டிருந்தார். வீங்கிய முகத்துடன் ரைசா ஒரு போட்டோவையும் வெளியிட்டார்.

இதை பார்த்ததும் அனைவரும் ஷாக் ஆனார்கள். பல நடிகைகளும், சின்னத்திரை பிரபலங்களும் டாக்டர் பைரவியிடம் முகத்திற்கு சிகிச்சை பெற்று வருவது வழக்கம். அவர் மிகவும் பிரபலமான டாக்டர்.
ஆனால், பைரவிக்கு எதிராக ரைசா ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதை, அவரிடம் சிகிச்சை பெற்ற பலர் அதை மறுத்து வருகின்றனர்.