சீனாவின் 9 நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்த அமெரிக்கா
சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதாக கூறி 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
கடந்த சில வருடங்களாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகம், தொழில்நுட்பம், ஹாங்காங் விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் பதற்றம் அதிகரித்து வருகிறது. சீன ராணுவத்துக்கு சொந்தமான அல்லது சீன ராணுவம் கட்டுப்படுத்தும் சீன நிறுவனங்களில், அமெரிக்கா முதலீடு செய்யக் கூடாது என உத்தரவைப் பிறப்பித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அந்த வகையில் தற்போது சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, விமான தயாரிப்பு நிறுவனமான கோமேக் உள்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்த்து அமெரிக்கா தடை விதித்துள்ளது.
மேலும், இதில் முதலீடு செய்துள்ள அமெரிக்கர்கள் வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் தங்கள் பங்குகளை திரும்ப பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.