18 ரூபாய் சிகரெட் இனி 72 ரூபாய் - மத்திய அரசு அறிவிப்பு

Government Of India
By Sumathi Dec 29, 2025 02:19 PM GMT
Report

நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கலால் வரி சட்டத் திருத்த மசோதா, சுகாதார பாதுகாப்பு வரி மசோதா என இரு மசோதாக்களை தாக்கல் செய்தார்.

கலால் வரி 

கலால் வரி சட்டத்தின் கீழ், 65 மில்லி மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 200 ரூபாயும், 65 மில்லி மீட்டர் முதல் 70 மில்லி மீட்டருக்கு மிகாமல் இருக்கும் ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 250 ரூபாயும் கலால் வரி விதிக்கப்பட்டுகிறது.

18 ரூபாய் சிகரெட் இனி 72 ரூபாய் - மத்திய அரசு அறிவிப்பு | Cigarette Paan Masala Price New Bill India Govt

ஆனால், புதிய கலால் வரி சட்டத் திருத்த மசோதா மூலம் 65 மில்லி மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 2 ஆயிரத்து 700 ரூபாயும், 65 மில்லி மீட்டர் முதல் 70 மில்லி மீட்டருக்கு மிகாமல் இருக்கும் ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு 

அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெல்லும் புகையிலைக்கான வரி நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டு, 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலைக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும்,

5 ரூபாய்க்கு பருப்பு, சாதம், சப்பாத்தி; 100 இடங்களில்.. எங்கு தெரியுமா?

5 ரூபாய்க்கு பருப்பு, சாதம், சப்பாத்தி; 100 இடங்களில்.. எங்கு தெரியுமா?

நிக்கோட்டின், சுவையூட்டிகள் உள்ளிட்ட புகையிலை சேர்மானங்களுக்கான வரி 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாகவும் 5 மடங்கு உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், தற்போது 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை 72 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.