பிக்பாஸ் வீட்டில் பணத்துடன் வெளியேறிய சிபி செய்த முதல் சம்பவம் என்ன தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 5ல் ரூ.12 லட்சம் பணத்துடன் வெளியேறிய சிபி புவன சந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஓகே கண்மணி படத்தில் சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான சிபி மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிபி முதல் நாளில் இருந்து 95வது நாள் வரை நேர்மையாகவும், சிறப்பாகவும் விளையாடி கவின், கேபியை போல பிக் பாஸ் வீட்டில் இருந்து ரூ.12 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
அந்த எபிசோட் ஒளிபரப்பாவதற்கு முன்பே ரசிகர்களை சந்தித்த சிபியின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், முதன் முறையாக பிக் பாஸ் அனுபவங்கள் குறித்து சிபி போட்டுள்ள முதல் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
என்னவொரு அமேசிங்கான ரைடு இது. இப்படியொரு வாய்ப்பை எனக்கு அளித்த பிக் பாஸ் குழுவுக்கும் விஜய் டிவிக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் என் மனமார்ந்த நன்றி என நடிகர் சிபி ட்வீட் செய்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த 95 நாட்களும் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாட்களாக மாறிவிட்டது. என்னையும் இன்னும் கொஞ்சம் நல்ல மாதிரியாக மாற்றின. சக ஹவுஸ்மேட்கள் அனைவருமே நல்ல இதயம் கொண்டவர்கள், அன்பானவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்திறமை கொண்டவர்கள். எல்லோரும் என்னை பொறுத்தவரையில் வின்னர் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் உங்களின் ஆதரவு இல்லாமல் நாங்க பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது. நீங்க போட்ட ஒவ்வொரு ஓட்டுக்கும் நன்றி. ஒவ்வொரு ட்வீட்டுக்கும் நன்றி என சிபி பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.