பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பங்குத்தந்தை!

Sexual harassment POCSO Child Abuse Ramanathapuram
By Sumathi Aug 09, 2022 10:58 AM GMT
Report

தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பங்குத்தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பங்குத்தந்தை

சிவங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்ராபர்ட் (46). இவர் ராமநாதபுரம், மண்டபம் பகுதியிலுள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்துவருகிறார்.

பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பங்குத்தந்தை! | Church Father Who Sexual Assault To 3Childrens

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் தொல்லை 

பிரார்த்தனை நிறைவடைந்து, அனைவரும் தேவாலயத்தைவிட்டு புறப்பட்ட நிலையில், மண்டபம் பகுதியிலிருந்து பிரார்த்தனைக்கு வந்திருந்த மூன்று சிறுமிகளை மட்டும் பங்குத்தந்தை ஜான்ராபர்ட் தனியாக அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பங்குத்தந்தை! | Church Father Who Sexual Assault To 3Childrens

அங்கு அவர் சிறுமிகளிடம், பாலியல் உணர்வுகளைத் தூண்டும்விதமான ஆபாசவார்த்தைகளால் பேசிக்கொண்டே சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடமிருந்து தப்பி வந்த மூன்று சிறுமிகளும் தங்களின் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி அழுதுள்ளனர்.

புகார்  உறுதி

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், உடனடியாக ராமநாதபுரம் குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், சிறுமிகள் மூன்று பேரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தினார்.

அதில் பங்குத்தந்தை சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மண்டபம் காவல் நிலையத்தில் பங்குத்தந்தை மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் பங்குத்தந்தை ஜான்ராபர்ட் மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.