நட்புனா இதாண்டா - நண்பன் உயிரிழந்தத துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்!
சென்னை குரோம்பேட்டை அருகே நட்புக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்துள்ளனர் ஒரு நண்பர்கள்.
சென்னை திருநீர்மலை பகுதியில் வசித்து வந்த சரத்குமார் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.
இவரின் உயிர் நண்பர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். சரத்குமாரோ இவரது நண்பனின் நினைவிலேயே அலைமோதி வந்துள்ளார்.
இந்த துக்கத்தை மறப்பதற்காக தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியும் வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவும் இதே போல் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வந்து தூங்க சென்றிருக்கிறார்.
மனைவியோ, கணவன் வேதனையில் இருப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி வேறு அறையில் குழந்தைகளோடு தூங்கியுள்ளார்.
இன்று காலை எழுந்து வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தாரை அழைத்து கதவை உடைத்தார்.
அப்போது கணவன் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.