கிறிஸ்துமஸ் நன்னாளில் எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகள்- பிரதமர் மோடி

By Jon Dec 25, 2020 08:03 PM GMT
Report

இன்று, கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில். ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் கொள்கைகளும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தைத் தருவதாகவும்.

அவரது பாதை ஒரு நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கான வழியைக் காட்டட்டும். கிறிஸ்துமஸ் நன்னாளில்எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.