கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
இயேசு கிறிஸ்து அவதரித்த நாளான இன்று உலகமெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடனம், கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் கட்டுப்பாடுகளுடன் வழக்கத்தை விட எளிமையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு அரசின் செயல்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் கிறிஸ்துமஸ் வழிபாடு நடத்துவதற்கு ஏராளமான தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து தேவாலயங்களிலும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் பிரார்த்தனை கூட்டம் நடந்து வருகிறது.சென்னை, குமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, புதுச்சேரி, என தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது.
சில திருச்சபைகளில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான மக்கள் வருகை தந்தன.ர் இந்த நிகழ்ச்சியில் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் மக்களுக்கு சிறப்பு நற்செய்தியை வழங்கினார்.