கிறிஸ்துமஸ் பண்டிகை ; இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Christmas
Chennai
By Thahir
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக இன்று முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
வரும் 25-ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.