கிறிஸ்துமஸ் பண்டிகை; 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Christmas
Government of Tamil Nadu
Chennai
By Thahir
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
600 சிறப்பு பேருந்துகள் தயார்
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற டிசம்பர்.25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், தொடர் அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இதையடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.