மோகனை கைது செய்யுங்கள் : ருத்ர தாண்டவ டிரைலரால் கொந்தளிக்கும் கிறிஸ்துவர்கள்
பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானநிலையில் கிறிஸ்தவ சமுதாயத்தினரிடையே இந்த ட்ரெய்லர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிறுபான்மையினர் நல கட்சியின் தலைவர் சாம் ஏசுதாஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் அளித்துள்ள புகாரில்: கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும் படியாகவும் மதக்கலவரத்தை தூண்டும் படியாகவும் அமைந்திருக்கிறது ருத்ரதாண்டவம் படத்தின் டிரைலர்.
ஆகவே மதக்கலவரத்தை தூண்டும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும். இந்த படத்தை இயக்கிய மோகன் ஜி கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே மதன் இயக்கத்தில் வெளியான திரௌபதி படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஆனால் ருத்ரதாண்டவன் வெளிவருவதற்கு முன்பாகவே சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.