இயேசு மது குடித்தார்; விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்கணும் - கிறிஸ்தவ சபை கடும் கண்டனம்!

Tamil Cinema Vijay Antony Tamil nadu
By Sumathi Mar 16, 2024 09:47 AM GMT
Report

இயேசு குறித்த விஜய் ஆண்டனி கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் ‘ரோமியோ’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

இயேசு மது குடித்தார்; விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்கணும் - கிறிஸ்தவ சபை கடும் கண்டனம்! | Christian Commitee Slams Vijay Antony For Jesus

இந்தப் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதலிரவில் நாயகி மது அருந்துவது போல வெளியாகி இருந்த போஸ்டர் பற்றி விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “குடிப்பது தவறுதான். ஆண், பெண் என யார் குடித்தாலும் தவறுதான்.

நம் நாட்டில் நீண்ட காலமாகவே குடி உள்ளது. திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார்” எனத் தெரிவித்தார். இவரது பேச்சு இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்னொரு மொழி கற்பது கஷ்டம்; செருப்பு போடாதது ஏன்..? நடிகர் விஜய் ஆண்டனி பதில்!

இன்னொரு மொழி கற்பது கஷ்டம்; செருப்பு போடாதது ஏன்..? நடிகர் விஜய் ஆண்டனி பதில்!

கிறிஸ்தவ சபை கண்டனம்

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக எந்த ஆதாரம் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துவுடன் ஒப்பிட்டு,

இயேசு மது குடித்தார்; விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்கணும் - கிறிஸ்தவ சபை கடும் கண்டனம்! | Christian Commitee Slams Vijay Antony For Jesus

‘இயேசு கிறிஸ்து மது குடித்தார்’ என பொதுவெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.