டெஸ்ட் போட்டி; ஓய்வை அறிவித்த கிறிஸ் மோரிஸ்
தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து போட்டிகளிலும் இருந்தும் ஒய்வுபெறுவதகா அறிவித்துள்ளார்.
கிறிஸ் மோரிஸ் தென்னாப்பிரிக்காவுக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.அதோடு ஐபிஎல் தொடரின் முக்கிய வீரராகவும் இருந்துள்ளார்.
34 வயதான மோரிஸ் தனதுஓய்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மோரிஸ் தனது கடைசி சர்வதேச போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக ஜூலை 2019 இல் விளையாடினார். 2012-ல் சர்வதேச போட்டியில் அறிமுகமான மோரிஸ், தென்னாப்பிரிக்காவுக்காக 4 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 23 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கிய வீரர் என்றால் அது மோரிஸ் தான், ஐபிஎல் 2021 ஏலத்தில் 16.25 கோடிக்கு மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
இது வரை 81 ஐபிஎல் போட்டிகளில் 618 ரன்கள் குவித்ததோடு, 95 விக்கெட்டுகளையும் விழ்த்தியுள்ளார். இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் கடைசி டெஸ்ட் போட்டியில் சற்று நேரத்தில் மோதவுள்ள நிலையில் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் மோரிஸ் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.