அப்போ இதய பிரச்சனை..இப்ப புற்றுநோய் : பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்வில் சோகம்
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான கிறிஸ் கெய்ன்ஸ் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவருக்கு பக்கவாதத்தால் கால்கள் செயல் இழந்தது.
51 வயதான கிறிஸ் கெய்ன்ஸ் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த வாரம் வீடு திரும்பினார். இந்நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கெய்ன்ஸ்க்கு குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை இன்ஸ்கிராம் மூலம் கிறிஸ் கெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் அடுத்தகட்ட போராட்டத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், இந்த பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். கிறிஸ் கெய்ன்ஸுக்கு மெலினியா என்ற மனைவியும் , இரு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.