பிரதமர் மோடி செய்த செயல்...வாழ்த்து கூறிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் ; வைரலாகும் ட்வீட்

chris gayle wish pm narendra modi 73rd republic day jonty rhodes
3 மாதங்கள் முன்

கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. ஆர்சிபி அணிக்காக விளையாடிய பிறகு தான் கிறிஸ் கெயிலுக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது.

எல்லாவற்றையும் விட மைதானத்தில் எப்போதுமே பாசிட்டிவிட்டியே பரப்பும் பாசிட்டிவிட்டி குடோன் தான் கிறிஸ் கெயில்.

ரசிகர்களுடன் உடல் மொழியில் உரையாடி, நடனமாடி மகிழ்விப்பது போன்ற செயல்களை செய்து லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கெயில்.

தற்போது பிரதமர் மோடியின் மனதையும் வென்றிருக்கிறார் இவர். ஆம் இருவரும் தனிப்பட்ட முறையில் கூட உரையாடிக் கொள்வார்களாம். இதனை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்திய மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

"இந்தியாவின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து இந்தியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடியுடனும், இந்திய மக்களுடனும் எனது நெருங்கிய தனிப்பட்ட உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி எனக்கு அனுப்பிய தனிப்பட்ட குறுஞ்செய்தியைக் கண்டு இன்று நான் கண்விழித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.