இனி கிறிஸ் கெய்ல் விளையாட மாட்டார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலகக்கோப்பை டி20 தொடருக்காக மே.இ.தீவுகள் அணியில் ஆட தன்னை புத்துணர்வாக வைத்துக் கொள்ள ஐபிஎல் பயோபபுள் சூழலிலிருந்து விடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்துஅவர், “கடந்த சில மாதங்களாக பயோ பபுள்தான் வாழ்க்கையாக இருந்து வருகிறது. எனவே நான் வெளியேறி மனதை புத்துணர்வு அடையச் செய்ய வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆட நான் உதவி செய்ய விரும்புகிறேன். அதனால் துபாயிலிருந்து விலகுகிறேன்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு என் நன்றிகள், இந்த பிரேக்குக்கு அனுமதி அளித்த அவர்களுக்கு நன்றி. என்னுடைய வாழ்த்துக்களும் நம்பிக்கைகளும் எப்போதும் அணியுடன் தான் இருக்கிறது.
வரும் ஆட்டங்களில் நன்றாக ஆட வாழ்த்துக்கள். பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவும் கெய்ல் முடிவை மதிப்பதாகவும் டி20 உலகக்கோப்பைக்குத் தன்னை தயார் செய்து கொள்ளும் அவரது முடிவையும் மதிப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
பயோபபுள் என்பது வீரர்களின் உடல்-மன இறுக்கத்தை வளர்ப்பதாகும் இந்திய அணி இங்கிலாந்திலிருந்து 5வது டெஸ்ட் விளையாடாமல் வந்ததற்கு இதுவும் ஒரு காரணம், மனத்தின் உற்சாகத்தைக் கெடுக்கக் கூடியது பயோ பபுள் என்று பல வீரர்கள் விலகியுள்ளனர்,
பென் ஸ்டோக்ஸ் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர் இரண்டையும் உதறியது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் கெய்லின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மற்றும் பஞ்சாப் அணியின் தீவிர ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.