கிறிஸ் கெயில் எடுத்த திடீர் முடிவு.. ஐசிசியால் வந்த சோதனை
இனி யுனிவெர்சல் பாஸ் என தன்னை கூறிக்கொள்ளப்போவதில்லை என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மே.தீ.அணி வீரர் கிறிஸ் கெயில் 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 67 ரன்கள் குவித்து பழைய ஃபார்முக்கு திரும்பினார். இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது அடைமொழியான யுனிவர்சல் பாஸ் என்ற ஸ்டிக்கர் கொண்ட பேட்டிற்கு பதிலாக வெறும் ‘பாஸ்' என்று மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டை கெயில் பயன்படுத்தினார்.
இதுகுறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு நான் யுனிவர்சல் பாஸ் என்று கூற விரும்புவேன். எனினும் நான் அப்படி கூறிக்கொள்வது ஐசிசிக்கு பிடிக்கவில்லை. அப்படி கூறிக்கொள்ள கூடாது என நினைக்கிறது. எனவே, நான் எனது அடைமொழியை சுருக்கி தி பாஸ் என்று வைத்துக்கொண்டேன் என கெயில் தெரிவித்தார்.