கிறிஸ் கெயில் இவ்வளவு மோசமானவரா? - வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் வாழ்க்கையில் சில மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
யுனிவர்சல் பாஸ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெயில் களத்தில் எப்படி அதிரடி காட்டுவாரோ அதேபோல் களத்திற்கு வெளியே பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்குவதும் வழக்கம். அவர் இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு சோகத்தையும், ஐபிஎல் அணிகளுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளன.
ஆனால் அவ்வப்போது கிறிஸ் கெயில் பெயர் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் போது கிறிஸ் கெயில் அங்குள்ள ஹோட்டலில் 3 இளம் பெண்களுடன் அரைகுறை ஆடையுடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கெயிலின் பெயர் சிக்கவில்லை என்பது ஆச்சரியம்.
இதன்பின் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அறைக்கு வந்த பெண் தெரபிஸ்ட் முன்னால் கெயில் தனது டவலை அவிழ்த்து காட்டி பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து அந்த பெண் நீதிமன்றத்தில் கெயில் மீது வழக்கு தொடர பிறகு சமரசம் பேசி கெயில் அந்த வழக்கிலிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பிக்பேஷ் லீக் தொடரில் அதிரடியாக ஆடிவிட்டு வந்த கெயிலிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி கண்டார். அப்போது அவரிடம் கெயில் தகாத முறையில் பேசினார். வெட்கப்படாதீர், உங்களை அருகில் பார்ப்பதற்காக தான் இவ்வளவு ரன்கள் அடித்தேன் போன்ற கூற அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் பார்ட்டி ஒன்றின் போது கெயில், செர்லின் சோப்ரா என்ற பெண்ணிடம் , ஆடையை கலையும் படி மது போதையில் கூறியுள்ளார். பின்னர், அவரும் தனது ஆடையை கலைக்க முயன்றுள்ளார். நிலைமை மோசமாக சக வீரர்கள் கெயிலை அங்கிருந்து அப்புறப்படுத்தி அமைதிப்படுத்தினர். கெயிலின் கடந்த கால வரலாறை கண்டால் அவரது ரசிகர்களே அதிர்ச்சி அடைவார்கள் என்பதே நிதர்சனம்.