மரண படுக்கையில் பிரபல கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

Thahir
in கிரிக்கெட்Report this article
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தவர் தான் கிறிஸ் கெய்ர்ன்ஸ்.
நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 215 ஒரு நாள் மற்றும் 2 டி-20 போட்டிகளில் விளையாடினார். 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் கிறிஸ் கெய்ர்ன்ஸ்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கிறிஸ் கெய்ர்ன்ஸ்க்கு முடக்குவாதம் ஏற்பட்டது. இடுப்புக்கு கீழ் எந்த உறுப்புகளும் இயங்கவில்லை.அதுமட்டுமின்றி இதயத்திற்கு செல்லும் நிரம்பில் கோளாறு.
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்ட கெய்ர்ன்ஸ்க்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உடலில் அசைவின்றி ஒரு வாரம் இருந்தார்.
அதன் பின்னர் தான் கிறிஸ் கெய்ர்ன்ஸ்க்கு நினைவு திரும்பியது. ஆனால் அவரால் உடலில் சிறு அசைவை கூட மேற்கொள்ள முடியவில்லை.
கிரிக்கெட் மைதானம், ஹோட்டல், ஏர்போர்ட் என சுற்றி திரிந்த கால்கள் மருத்துவமனையில் ஒரே படுக்கையில் மூன்று மாதத்திற்கு அசைவின்றி கிடந்தது.
3 மாத மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார் கிறிஸ் கெய்ர்ன்ஸ். புயல் வேகத்தில் ஓடிய கால்கள் தற்போது சக்கர நாற்காலியின் அமர்ந்துள்ளது.
இருப்பினும் தனது விடாமுயற்சி மூலம் சக்கர நாற்காலியில் அமர்ந்தே உடற்பயிற்சி மேற்கொள்கிறார் கெய்ர்ன்ஸ். 51 வயதான கிறிஸ் கெய்ர்ன்ஸ், தாம் பிழைத்ததே அதிசயம் என்றும்,
இனி என் வாழ்நாளில் மீண்டும் நடப்பேனா என்று தெரியாது என்று கிறிஸ் கெய்ர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்தின் கிரிக்கெட்டில் தற்போது ஆரோக்கியமான சூழல் உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.