அறுவை சிகிச்சையால் உயிருக்கு போராடும் கிறிஸ் கெய்ன்ஸ்
நியூஸ்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸூக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கேன்பெரேரா நகரில் வசித்து வரும் கெய்ன்ஸுக்கு இம்மாதத் தொடக்கத்தில் இதயத்தில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கோளாறால் திடீரென மயங்கி விழுந்தார்.
கேன்பெரேரா நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கெய்ன்ஸுக்கு ஆக்சிஜன் உதவியோடு தீவிரமான சிகிச்சை தொடர்ந்து அளித்தும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.
இதையடுத்து, சிட்னியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கெய்ன்ஸுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை இதயத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை முடிந்தநிலையில் திடீரென கெய்னுக்கு ஸ்டோர் ஏற்பட்டு, அவரின் இடதுகால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு கெய்ன்ஸ் வழக்கறிஞர் ஆரோன் லாய்டு அளித்த பேட்டியில் ' கெய்ன்ஸுக்கு நடத்தப்பட்டஉயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை சிட்னி வின்சென்ட் மருத்துவமனையில் நடந்தது.
ஆனால், அந்த அறுவை சிகிச்சை முடிந்தாலும், அவரின் முதுகுத் தண்டுவடத்தில் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, அவரின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்துவிட்டன.
தற்போது ஆபத்தான நிலையைக் கடக்கவில்லை, ஆனால் கெய்ன்ஸ் நிலையாக இருக்கிறார். இதனால் முதுகு தண்டுவடத்துக்கு சிறப்பு சிகிச்சைஅளிக்கும் மருத்துவரை வரவழைத்துள்ளோம்.
இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்கள் கெய்ன்ஸ் உடல்நிலை தேற தேவையான உதவிகளை அளிப்பது அவரின் குடும்பத்துக்கு ஆறுதலாக இருக்கிறது. அதேநேரம் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமையும் மதிப்பளிக்கப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.