வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்திருக்கும் புதிய நபர் யார் தெரியுமா?

biggboss5 பிக்பாஸ் choreographeramir
By Petchi Avudaiappan Nov 23, 2021 09:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் புதிதாக நபர் ஒருவர் உள்ளே நுழைந்திருக்கிறார். 

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 53வது நாளை எட்டியுள்ளது. 52வது நாளான நேற்று வெளியான மூன்றாவது புரோமோவில் 'கனா காணும் காலங்கள்' என்கிற பெயரில் டாஸ்க் ஒன்று நடக்கிறது. ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் என இரு குழுவினராக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அப்போது ஒரு இடத்தில் புதிதாக ஒரு போட்டியாளர் இருப்பது தெரிய வந்தது. 

அவர் யார் என தேடிய போது நடன கோரியோகிராபர் அமீர் எனத் தெரிந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி', 'டான்ஸ் Vs டான்ஸ்', 'டான்ஸ் ஜோடி டான்ஸ்', 'கிங்ஸ் ஆஃப் டான்ஸ்' என்கிற நடன நிகழ்ச்சியில் இவர் கோரியோகிராபராக பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடைசியாய் ஒளிபரப்பான 'பிக்பாஸ் ஜோடிகள்' வரை இவர் கோரியோகிராபராக பணியாற்றியிருக்கிறார். மேலும், பல்வேறு திரைப்படங்களுக்கும் இவர் நடனம் அமைத்துள்ளார்.

இவரின் வருகையால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் வைல்டு கார்டு போட்டியாளராக அபிஷேக் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் அதே வாரத்தில் இன்னொரு போட்டியாளரும் களம் இறக்கப்பட்டிருக்கிறார் என்பதே ஆகும்.