ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கணவனின் உடலை முத்தமிட்டு கதறிய மனைவி

Accident Helicopter Wife Kissing Husband Death Tearing The Body
By Thahir Dec 10, 2021 08:55 AM GMT
Report

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கணவனின் உடலை பார்த்து முத்தமிட்டு கதறிய அழுத மனைவியை கண்டு சோகத்தில் முழ்கிய அதிகாரிகள் 

நீலகிரி மாவட்டம் குன்னுார் வெளிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு கடந்த புதன்கிழமை மாணவர்களிடையே உரையாட சென்ற போது,

இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தீ பிடித்தது.

இதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரி பிரிகேடியர் லக்விந்தர் சிங் உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அப்போது அவருடைய மனைவி அங்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை பார்த்து முத்தமிட்டு கதறி அழுதார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் கண்களும் கண்ணீர் வரத் தொடங்கின.