கொலஸ்ட்ராலை குறைக்கும் 5 சூப்பர் உணவுகள்
பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் உடல் எடை போடும் என்று நினைத்து இவற்றை தவிர்ப்பதுண்டு. ஆனதல் நம் உடல் ஆற்றலுடன் செயல்பட சிறிது கொழுப்பு அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இனிமேல் கொழுப்பு நிறைந்த உணவுகளை ஒட்டுமொத்தமாக தள்ளுவதை விட கீழ்க்கண்ட ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொண்டு உங்க எடை இழப்பு பெரிதும் உதவி புரியும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அவகேடா எனப்படும் எண்ணெய் பழம் இதில் மோனோசேச்சுரேட்டேடு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் போன்றவை யும் காணப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. அதிக கலோரி உணவிலிருந்து உங்களை விலக்கி வைக்கிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் இருக்கும்போது, முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
அவை பெரும்பாலும் மோனோசாச்சுரேட்டட் ஆகும். எனவே, உங்கள் எடை குறைக்கும் உணவுக்கு முழு முட்டைகளும் அவசியம். டார்க் சாக்லேட்டுகளை சாப்பிடுவதனால் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இது இரத்த அழுத்த அளவை குறைக்கும். இது ஆக்ஸினேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. தேங்காயில் நிறைவுற்ற கொழுப்புகள், லாரிக் அமிலம் உள்ளன.
இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் வயிற்று கொழுப்பைக் குறைக்கும்.
கொழுப்பு நிறைந்த மீன்களான சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் உள்ளன. இவை நம் இதயத்திற்கு நல்லது, மேலும் எடை குறைக்க உதவுகின்றன