தொடங்கும் சோழனின் பயணம் ..புலிக்கொடியுடன் பிரம்மாண்ட படகு.. வைரலாகும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

PonniyinSelvan ManiRatnam
By Irumporai Jul 28, 2021 08:49 AM GMT
Report

பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கி வருகிறார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் துவங்கியது.

தொடங்கும் சோழனின் பயணம்  ..புலிக்கொடியுடன் பிரம்மாண்ட படகு..  வைரலாகும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்! | Cholan Journey Ponnienselvan Shooting Spot

இதில் கலந்துகொள்ள ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார் உள்ளிட்ட பலர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.இதில் சரத்குமார் குடும்பம் ஐஸ்வர்யாராயினை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த, நிலையில் ,தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியாகியுள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடங்கும் சோழனின் பயணம்  ..புலிக்கொடியுடன் பிரம்மாண்ட படகு..  வைரலாகும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்! | Cholan Journey Ponnienselvan Shooting Spot

அதில், பிரம்மாண்ட படகு ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலில் பெரும்பாலான காட்சிகளில் கடலில் நடப்பவை. எனவே படகில் செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தொடங்கும் சோழனின் பயணம்  ..புலிக்கொடியுடன் பிரம்மாண்ட படகு..  வைரலாகும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்! | Cholan Journey Ponnienselvan Shooting Spot

இந்த புகைப்படங்களை படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அந்தப் படகின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சோபிதா துலிபாலா, அர்ஜுன் சிதம்பரம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, கிஷோர், ரகுமான் ஜெய ராம், லால், அஸ்வின் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயார்க்கின்றனர். ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ளார்.

புலிக்கொடியுடன் இருப்பது போல் உள்ள இந்த படகு புகைப்படங்கள் இணைய உலகில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

தொடங்கும் சோழனின் பயணம்  ..புலிக்கொடியுடன் பிரம்மாண்ட படகு..  வைரலாகும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்! | Cholan Journey Ponnienselvan Shooting Spot