‘‘ஊரடங்கில் எனக்கும் விருப்பம் கிடையாது ஆனால் வேறு வழியில்லை’’- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

curfew covid19 delhi Kejriwal
By Jon Apr 11, 2021 05:42 PM GMT
Report

ஊரடங்கில் தனக்கு உடன்பாடு கிடையாது எனவும், ஆனால் தற்போது படுக்கைகள் பற்றாக்குறைகாரணாமாக ஊரடங்கை தவிர வேறு வழியில்லை எனடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை குறைக்க,இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்புகளை நீக்குவது குறித்து நான் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக வீடு வீடாக பிரசாரம் செய்ய ட அரசு தயாராக இருக்கிறது.

டெல்லியில் 65 சதவீத நோயாளிகள் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருப்பதாக கூறிய கெஜ்ரிவால். ஊரடங்கில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் படுக்கைகள் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் தோல்வி ஆகியவையால் ஊரடங்கு தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என கூறினார்.