அரசு பள்ளி மாணவர்களுக்கு Chocolate Malt Health Mix
புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக காலை உணவு திட்டத்தில் Chocolate Malt Health Mix வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்ரீ சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளைக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.
சத்துணவு
ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எல்கேஜி முதல் பன்னிரண்டு வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 100 மிலி சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அதனுடன் Chocolate Malt Health Mix கலந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.