“விக்ரம் 60” படத்தின் மாஸ் அப்டேட் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

WrapForChiyaan60 ChiyaanVikram
By Petchi Avudaiappan Aug 15, 2021 04:41 PM GMT
Report

 நடிகர் விக்ரம் நடித்துள்ள 60வது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம்,பாபி சிம்ஹா, நடிகைகள் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் பெயரிடப்படாத ‘விக்ரம் 60’ படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக விக்ரம் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு கடாரம் கொண்டான் வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.