சித்தூர் பேருந்து விபத்து -பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
ஆந்திரா சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பகரபேட்டா காட் சாலையில் 52 பயணிகளுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு 10:30 மணியளவில் பேருந்தில் பயணித்த பயணிகள் நகரிக்கு அருகில் உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
Pained by the loss of lives in a tragic bus accident in Chittoor, AP. Condolences to the bereaved families. I hope the injured recover soon.
— PMO India (@PMOIndia) March 27, 2022
The next of kin of the deceased would be given Rs. 2 lakh from PMNRF and Rs. 50,000 would be given to the injured: PM @narendramodi
இந்நிலையில், ஆந்திரா சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan