சித்ரா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இன்று அவளுக்கு திருமணம்: கண்ணீருடன் பேசிய தோழி
சித்ரா இறந்து போய் இத்தனை நாட்கள் ஆகியும் இன்னமும் மர்மம் விலகவில்லை.. இதற்கு முன்புகூட எத்தனையோ நடிகைகள் தமிழகத்தில் தூக்கு போட்டு இறந்து போயிருக்கிறார்கள்.
ஆனால் அவைகளின் மர்மங்கள் முழுவதுமாக வெளியே தெரியாவிட்டாலும், ஓரளவு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் சித்ரா விஷயம் அப்படி இல்லை..
இந்த வழக்கில் இப்போது வரை அதாவது போஸ்ட் மார்ட்டம் முதல் ஆர்டிஓ விசாரணை வரை, அனைவரும் சொல்லும் ஒரே கருத்து சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால், தற்கொலைக்கு இன்னொரு காரணமும் உள்ளது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இன்னொரு காரணம் என்ன? என்பதுதான் தெரியாமலேயே உள்ளது.
இந்நிலையில் சித்ரா தற்போது உயிரோடு இருந்திருந்தால், இன்று அவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கும் என்று அவரது தோழியான விஜே தியா உருக்கமாக கூறியுள்ளார்.