சித்ராவின் மரணம் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட காவல்துறை
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை பிரபல நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதன் பெயரில் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து ஹேம்நாத் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் மீண்டும் விசாரிக்கப்பட 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
அந்த விசாரணையின் படி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, விசாரணை அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.