பங்குசந்தை மோசடி விவகரம் : சித்ரா ராமாகிருஷ்ணனுக்கு ஜாமீன்

By Irumporai Sep 28, 2022 06:19 AM GMT
Report

பங்குசந்தை மோசடி விவகரம் தொடர்பான வழக்கில் சித்ரா ராமாகிருஷ்ணனுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சித் ராம்கிருஷ்ணன்

சித் ராம்கிருஷ்ணன் என்எஸ்இ சிஇஓவாக 2013 முதல் 2016ம் ஆண்டுவரை இருந்த காலத்தில் கோ-லொகேஷன் ஊழல் நடந்தது. அதாவது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே சில குறிப்பிட்ட பங்கு தரகர்களின் சர்வர்கள் வைக்கப்பட்டு, பங்குபரிவர்த்தனை தகவல்கள் விரைவாகப் பகிரப்பட்டு, ஆதாயம் அடைந்ததாக புகார் எழுந்தது

பங்குசந்தை மோசடி விவகரம் : சித்ரா ராமாகிருஷ்ணனுக்கு ஜாமீன் | Chithra Ramakrishnan Bail Court

இது தொடர்பாக சித்ரா ராம் கிருஷ்ணன், ரவி நரேன் கேட்டுக்கொண்டதற்கின முன்னாள் மும்பை போலீஸ் ஆணையர் சஞ்சய் பாண்டே ஒட்டுக்கேட்டுள்ளனர். இந்த வழக்கில் எஸ்எஸ்இ முன்னாள் சிஇஓ நரேன், சித்ரா ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ரவி வாரணாசி, மகேஷ் ஹால்திபூர் ஆகியோர் மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.  

ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

இந்த நிலையில் , தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் மோசடி தொடர்பாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தொலைபேசி உரையாடல்களையும் அவர் ஒட்டுக்கேட்டுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டது என்பதும் இது குறித்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  பங்குசந்தை மோசடி விவகரம் தொடர்பான வழக்கில் சித்ரா ராமாகிருஷ்ணனுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.