சித்ரா நடித்த கடைசி சீரியல் 'இந்தியில்' ரீமேக் ஆகிறது

chithra chiththu mullai
By Jon 1 வருடம் முன்

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்த மறைந்த சித்ரா நடித்த கடைசி நாடகம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை தொடர்களில் மிகவும் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.

இது 4 அண்ணன் தம்பிகள் பற்றிய கதை ஆகும். மளிகைக்கடை வைத்திருக்கும் மூத்த அண்ணன், அவரது 3 தம்பிகள் ஆகியோரை சுற்றியே கதை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசம் ஆகியவை இத்தொடரில் இடம்பெற்று உள்ளதால் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று ஹிட்டானது. சுஜிதா, ஸ்டாலின், குமரன், வெங்கட் என இந்தத் தொடரில் நடித்தவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 9ம் தேதி அந்த நாடகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வருகிறார்.

தற்போது அந்த நாடகம் இந்தியில் "பாண்டியா ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இதுவரை இந்தி சீரியல் மட்டுமே தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வந்த நிலையில். முதல் முறையாக தமிழில் எடுக்கப்பட்ட நாடகம் ஒன்று இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.