சித்ரா வழக்கு - சென்னை நீதிமன்றத்தில் தந்தை பரபரப்பு மனு
சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
சித்ரா வழக்கு
சின்னத்திரையில் புகழ்ப்பெற்ற நடிகையாக வளம் வந்தவர் நடிகை சித்ரா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரில் நடித்து இவர் மிகவும் பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்த அவர், திடீரென சென்னை நசரத்பேட்டையிலுள்ள நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
சின்னத்திரை உலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் மரணம் குறித்த எந்த உறுதிப்படுத்தப்பட எந்த தகவலும் தற்போது வரை வெளிவரவில்லை.
தந்தை மனு
சித்ராவின் மரணத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது பல அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை சித்ராவின் பெற்றோர் முன்வைத்தனர். இந்நிலையில், சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான், நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்த வழக்கின் விசாரணை விரைந்து முடிக்கவும், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் எந்த முன்னேற்றம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வயதின் காரணமாக நீண்ட தூரம் சென்று வர முடியாத காரணத்தால் சென்னை ஹை கோர்ட்டிற்கு மாற்றும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்