மதுரை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வில் திருமணம் செய்த காதல் ஜோடி - மக்கள் வாழ்த்து
மதுரையில் மக்களுக்கு மிகவும் பிரசித்திப்பெற்ற விழா என்றால் அது சித்திரை திருவிழா தான்.
மதுரை மாவட்டத்தை சுற்றி லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வைகை ஆற்றில் ஒன்று திரண்டி கோலாகலமாக சித்திரை திருவிழாவை கொண்டாடி மகிழ்வார்கள்.
அந்த விழாவில் ஒன்று தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 05ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று (ஏப்ரல் 14ம் தேதி) ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது.
மதுரை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோதி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.