சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Madurai Meenakshi Temple
By Fathima Apr 19, 2026 08:30 AM GMT
Report

உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் மதுரை மட்டுமின்றி தென்தமிழகத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

சித்திரை திருவிழா இன்று காலை சுவாமி சந்நிதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

இன்று காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடி ஏற்றம் தொடங்கியது.

சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் | Chithirai Festival Begins

தொடர்ந்து காலை, மாலை என இரு வேளைகளில் மீனாட்சி சுந்தரேஷ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் வெவ்வேறு வாகனங்களில் தனித்தனியாக வலம்வருவார்கள்.

முக்கிய நிகழ்வுகள்

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்- ஏப்ரல் 26

திக்கு விஜயம்- ஏப்ரல் 27

திருக்கல்யாணம்- ஏப்ரல் 28

தேரோட்டம்- ஏப்ரல் 29

தீர்த்தவாரி- ஏப்ரல் 30

கள்ளழகர் எதிர்சேவை- ஏப்ரல் 30

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்- மே 1

சித்திரை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் | Chithirai Festival Begins