மேடையில் மகன் ஜோடியை தன்வசம் இழுத்த தந்தை... ? - வைரலாகும் வீடியோ - ஷாக்கான ரசிகர்கள்

Viral Video Chiranjeevi Ram Charan Pooja Hegde
By Nandhini Apr 27, 2022 12:21 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிரஞ்சீவி. தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆச்சார்யா’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தில், முதல்முறையாக சிரஞ்சீவி, மகன் ராம் சரண் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மேடையில் ராம் சரண், சிரஞ்சீவி, பூஜா ஹெக்டே மூவரும் மேடையில் நிற்கும் போது, பூஜா அங்கிருக்கிருந்து நகர பார்த்தார். அப்போது, உடனே பூஜாவை கயிறு கட்டி இழுப்பது போல சைகை செய்து தன் பக்கத்தில் நிறுத்தினார் சிரஞ்சீவி.

பிறகு, ராம் சரணை ஓரம் கட்டி சிரஞ்சீவி மற்றும் பூஜா ஒன்றாக இணைந்து போஸ் கொடுத்துக் கொண்டனர்.

தன் மகன் முன்னே அவரின் ஜோடியான பூஜாவை தன்வசம் இழுத்து போஸ் கொடுத்த இந்த கலகலப்பான வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பூஜா ஹெக்டேவே, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ -