நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் - பிரிட்டன் நாடாளுமன்றம் நடந்த சம்பவம்!
நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிரிட்டன் நாடாளுமன்றம் கவுரவித்துள்ளது.
நடிகர் சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் கடந்த 45 ஆண்டுகளாக தெலுங்கு , இந்தி , கன்னட ஆகிய மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டிமில்லாமல் நடிகர் சிரஞ்சீவி தனது தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவம் மற்றும் கல்வி உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சினிமா பங்களிப்பையும் சமூக தொண்டுகளையும் அங்கீகரிக்கும் விதமாக, “Team Bridge India”வின் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த “Lifetime Achievement Award” பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இதன் மூலம் சிரஞ்சீவி பெற்றுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவியின் சாதனைகளைப் பாராட்டினர். இது குறித்த புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த சிரஞ்சீவி, வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
