இ-பாஸ்போர்ட்டில் இனி சிப் பொருத்தம் - மத்திய அரசு முக்கிய தகவல்

Government Of India Passport
By Sumathi Apr 04, 2025 10:13 AM GMT
Report

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இ-பாஸ்போர்ட் 

கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

e passport

இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தருமர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

வக்பு வாரிய திருத்த மசோதா; மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும் - பிரதமர் மோடி

வக்பு வாரிய திருத்த மசோதா; மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும் - பிரதமர் மோடி

மத்திய அரசு தகவல்

அதில் சென்னை, ஐதராபாத், நாக்பூர், புவனேஷ்வர், ஜம்மு உள்ளிட்ட பல்வேறு மண்டல அலுவலகங்களில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பல பாஸ்போர்ட் அலுவலகங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.

இ-பாஸ்போர்ட்டில் இனி சிப் பொருத்தம் - மத்திய அரசு முக்கிய தகவல் | Chip Equipped E Passport Central Govt Info

சென்னையில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 20,729 பேருக்கு இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய குடிமக்கள் வெளிநாட்டிற்கு செல்லும்போது விமான நிலையங்களில் உள்ள இமிக்ரேஷன் கவுன்டர்களில் பல மணிநேரம் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.