ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியை நடத்த அனுமதி
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியை நடத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
முழுமையான ஆய்வு
கர்நாடக உள்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று, பெங்களூரு சின்னசாமி மைதான வளாகத்தில் முழுமையான ஆய்வை மேற்கொண்டது.

நாள் முழுவதும் நடைபெற்ற இந்த ஆய்வில், மைதானத்தின் கட்டுமான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நிபுணர் குழு மைதானத்தைப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்க, ஐபிஎல் 2026 போட்டிகளை நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இறுதிப் போட்டி
இதன்மூலம் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் RCB vs SRH போட்டியை சின்னசாமி மைதானம் நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் ஒரு playoff போட்டியையும், இறுதிப் போட்டியையும் நடத்தும் வாய்ப்பை சின்னசாமி மைதானம் பெற்றுள்ளது.
நடப்பு சாம்பியன் அணியே இறுதிப் போட்டியை நடத்தும் என்ற பாரம்பரியத்தை சின்னசாமி மைதானம் தொடரும்.
