பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை - இறந்த நிலையிலும் கொடூரன் வெறிச்செயல்!
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா(28). கணவரை இழந்த இவர், தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நாகுகுப்பம் தெற்கு மேடு பகுதியில் இருக்கும் பால் சேகரிக்கும் நிலையத்தில் பாலை ஊற்றி விட்டு வீட்டிற்குத் திரும்பியவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் ட்டின் அருகே உள்ள மக்காச்சோள வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இளைஞர் கைது
இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பெயரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். உடனே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து எஸ்.பி., ரஜத் சதுர்வேதி மேற்பார்வையில், 5 தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
அதன்படி, நாகுப்பத்தை சேர்ந்த குமரேசன்(32) என்பவரை கைது செய்து விசாரித்துள்ளனர். அதில், டீக்கடையில் வேலை செய்து வந்த குமரேசன் சம்பவத்தின் போது காட்டுவழி பகுதியில் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது பால் ஊற்றுவதற்காக வந்த நிர்மலாவை அடித்து சோளக்காட்டு பகுதி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்து எழுந்து கூச்சலிட முயன்ற பெண்ணை, கழுத்தை நெரித்து கொலை செய்து, மீண்டும் பலாத்காரம் செய்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.