மீண்டும் அதிமுகவின் பொதுச் செயலாளராக சின்னம்மா சசிகலா? வெளிவந்த அறிக்கை
சொத்து குவிப்பு வழக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானார். இதனைதொடர்ந்து, கடந்த 8ம் தேதி சசிகலா தமிழகம் வந்தார். பின்னர் சசிகலா பல அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், மீண்டும் அதிமுக கொடியுடன் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களை கர்நாடக மாநில கழக செயலாளர் யுவராஜ், தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

அதேபோல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்பட கலைஞர் ரூபன், தனது குடும்பத்துடன் தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.