சின்னம்மா டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனா... கஸ்தூரியின் வைரல் டுவிட்
4 ஆண்டுகால சிறைத்தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாக பேனர்கள், போஸ்டர்கள், பூமழை தூவி அமமுகவினர் அவரை வரவேற்றனர். தீவிர அரசியலில் களமிறங்கப் போவதாகவும் சசிகலா அறிவித்துவிட்டார், இவரது அடுத்தகட்ட நடவடிக்கைள் என்னவாகும் இருக்கும் என்பதே பலரது பேச்சாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டில், நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம். ஹூம்.
COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்குவுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்!" என்று பதிவிட்டுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.