"நம்ம ஊர் பொறுக்கிங்க.. பொறுக்கிங்க தான்... ரத்தத்துலயே ஊறுனது... - பொங்கி எழுந்த சின்மயி - வைரலாகும் பதிவு
குழந்தைகள் குறித்து சர்ச்சையாக பேசியவர்களை "நம்ம ஊர் பொறுக்கிங்க.. பொறுக்கிங்க தான்... ரத்தத்துலயே ஊறுனது... என்று கோபத்தோடு சின்மயி தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகி சின்மயி
பிரபல பின்னணி பாடகி சின்மயி, ஏ. ஆர். ரகுமான் இசையில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். பல படங்களில் இவர் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
திருமணம்
சின்மயி கடந்த 2014ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்தார்.
சர்ச்சை
கடந்த சில ஆண்டுகளாகவே சின்மயியை சுற்றி சர்ச்சையான கருத்துக்களும், விமர்சனங்களும் வலம் வர தொடங்கியது. கவிஞர் வைரமுத்து மீது அவர் கொடுத்த மீடூ புகார் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது. அன்றிலிருந்து இன்றுவரை சின்மயி தொடர்ந்து அதுகுறித்து சமூகவலைதளங்களில் பேசி வருகிறார்.
இரட்டைக் குழந்தை
3 மாதத்திற்கு முன்பு, பாடகி சின்மயி - ராகுல் ரவீந்திரன் தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள தம்பதி, டிரிப்தா மற்றும் ஷர்வாஸ் என குழந்தைகளின் பெயரை குறிப்பிட்டனர். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தாரா?
என்னதான் சமூக வலைதளங்களில் சின்மயிக்கு வாழ்த்துக்கள் குவிந்தாலும், சிலர் சின்மயி கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றைக் கூட இதுவரை வெளியிடவில்லையே, ஒருவேளை சின்மயி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தாரா என்ற கேள்விகளை சமூகவலைத்தளங்களில் எழுப்பி வந்தனர்.
சின்மயி விளக்கம்
இந்த கேள்விக்கு சின்மயி விளக்கம் கொடுத்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“நான் கர்ப்பமாக இருக்கும்போது புகைப்படங்களை வெளியிடாததால், நிறைய பேர் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தீர்களா என கேட்கிறார்கள், அவர்களை நான் முற்றிலும் நேசிக்கிறேன். பர்சனல் விஷயம் என்பதால் நான் பாதுகாத்து வந்தேன், எனது நெருங்கிய வட்டத்துக்கு மட்டும் தெரியும். எனது குழந்தைகளின் புகைப்படங்களை நீண்ட காலத்துக்கு சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன். ஆபரேஷன் மூலம் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த சமயத்தில் நான் பஜனை பாடிக் கொண்டிருந்தேன்” என்று பதிவிட்டார்.
குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி
இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், மீண்டும் சின்மயியின் இரட்டை குழந்தை குறித்து சர்ச்சை சமூகவலைத்தளங்களில் உலா வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சின்மயி, 32-வது வார கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொண்ட படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்.
அதோடு இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தையும் பதிவிட்டிருந்தார். அப்படத்திற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், வாழ்த்துகள் வைரமுத்து சார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆத்திரமடைந்த சின்மயி
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சின்மயி டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இப்புகைப்படத்தை நான் பதிவிட்டேன். இதற்கு தமிழர் ஒருவர் இதனை பதிவிட்டுள்ளார்.
நான் எனது கர்ப்பக்கால புகைப்படத்தை வெளியிடாததற்கு உண்மையான காரணம் இருக்கிறது. எனக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால் தான் புகைப்படத்தை வெளியிடவில்லை. என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார்.
நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்... ரத்தத்துலயே ஊறுனது... வளர்ப்பும் அப்படி..." என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இப்பதிவு வீண் வன்மத்தை பெண்கள் மேல் திணிக்கும் நபர்களுக்கு சவுக்கடியாக இருக்கும் என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.